என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மண்டபம் கடல் அட்டைகள்"
ராமநாதபுரம்:
ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களை உள்ளடக்கிய மன்னார் வளைகுடா மற்றும் பாக்.ஜலசந்தி பகுதியில் பவளப் பாறைகள் உள்ளிட்ட அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் உள்ளன.
பவளப்பாறை கடற்கரைக்கு பாதுகாப்பை கொடுப்பதுடன், உணவுக்காகவும், மருந்திற்காகவும் பயன்படும் மீன்கள். சிப்பிகள், சங்குகளுக்கு புகலிடமாகவும் திகழ்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன் கடல் அட்டை சேகரிப்பில் மீனவர்களுக்கு நல்ல வருவாய் கிடைத்து வந்தது. கடல் அட்டைக்கு மத்திய அரசால் தடை ஏற்படுத்தப்பட்டதும் கடல் அட்டை கடத்தல் தொழிலாக மாறியது.
அரசால் தடை செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் தடை செய்யப்பட்ட உயிரினங்களை கடத்தும் நபர்களின் ஒட்டு மொத்த விவரங்களையும் வனத் துறை நன்கு அறிந்த நிலையிலும் கண்டு கொள்ளாமல் இருப்பது புதிராக உள்ளது.
கடத்தல் குறித்து யாரேனும் தகவல் கொடுத்தாலும் கண்டு கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது. தகவல் அளித்த நபர்களின் விவரத்தை கடத்தல் காரர்களுக்கு தெரிவித்து விடுவதால் வனத்துறைக்கு தகவல் தெரிவிப்பது கிடையாது.
இதனால் கடத்தல் குறித்த தகவல் புலனாய்வு மற்றும் தனிப்பிரிவு போலீசாருக்கு செல்கிறது. நேற்று நள்ளிரவு மண்டபம் முயல்தீவு பகுதியில் இருந்து கடல் அட்டை கடத்தப்படுவதாக மரைன் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதை தொடர்ந்து அங்கு சென்ற போலீசார் அங்கு நின்ற படகை சோதனை செய்தனர்.
அதில் 1300 கிலோ பதப்படுத்தப்பட்ட கடல் அட்டை இருந்தது தெரிய வந்தது. இதன் சர்வதேச மதிப்பு மதிப்பு ரூ. 3 கோடி.
கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடி மலையாண்டி (வயது 40), வேதாளை ஹாசிம் ஆகிய 2 பேரையும் பிடித்து கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட படகையும் பறிமுதல் செய்தனர்.
பிடிபட்ட 2 பேரிடமும் மரைன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடல் வளத்தை பேணும் வகையில் கடல் பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் மேலாண்மைக் குழுக்கள் அமைக்கப்பட்டும் கடல் அட்டை கடத்தல் தொழில் தடையின்றி நடந்து வருகிறது வேதனைக்குரியது என்று கடல்வாழ் உயிரின ஆர்வலர்கள் தெரிவித்தனர். இதை தடுக்க மாவட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர்கள் கூறினர். #seacucumber
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்